கம்பஹா வத்தளை, எந்தலை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, தீர்வை வரியின்றி இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 23ஆயிரம் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.