நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 291ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சௌமிய சர்கார் சதம் கடந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்த சதத்தின் மூலம் நியூஸிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சௌமிய சர்கார் முறியடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 163 ஓட்டங்களை குவித்தார்.
இதுவே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்களாக காணப்பட்டது.
குறித்த சாதனையை தற்போது பங்களாதேஷ் அணியின் சௌமிய சர்கார் தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், 292 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.