142 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட ‘தங்க கவசவாலான்’ அதிசய பாம்பு!

0
121

இந்தியாவின் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே உள்ள பெம்பரமலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் தொழிலாளர்கள் சிலர் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்த வேளையில், மண்ணுக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டபொழுது மண்ணுக்குள் இருந்து வந்த ‘தங்க கவசவாலன்’ என்ற அதிசய பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் வனத்துறையினர் இதுகுறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ‘தங்க கவசவாலன்’ என்ற இந்தப் பாம்பு கடந்த 1880-ம் ஆண்டு பிடிக்கப்பட்டது. அதன்பின்னர் 142 ஆண்டுகளுக்கு பின்னர் தற்பொழுது வனப்பகுதியில், மண்ணுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.