”15 ஆம் திகதி ஹர்த்தால்!”

0
9
An old brass padlock locked beige rolling steel door, blank for copy at the left side.

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டமையை ஒட்டி இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படும் நிலையில், தமிழர் தாயகத்தில் இன்று வரைத் தொடரும் இராணுவத்தின் மிருகத்தனத்தை எதிர்த்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடிதம் மூலம் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவுக்கும் அறிவித்துள்ளனர்.