15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த நபர் கைது !

0
35

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நிறுவனங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சவர்க்காரங்களை பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.