1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா!

0
7

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்​பில் முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் திகதி நடை​பெற்​றது.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணைக்​குப் பிறகு, பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நெருங்​கிய நண்​பர் நீத்து நவீன் ரொஹ​ரா(எ) நஸ்​ரின் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் ஏடிஎஸ் படை​யினர் 14 பேரை தேடி வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வால் மதம் மாற்​றம் செய்​யப்​பட்​ட​வர்​களிடம் ஏடிஎஸ் படை​யினர் நேரில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

மும்​பை​யில் ஒரு பிரபல தர்கா​வுக்கு வெளியே ஜுங்​கூர் பாபா, மோதிரங்​களை விற்று வந்​துள்​ளார். அப்​போது​தான் அவருக்கு துபாய் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களில் மதம் மாற்​றத்​துக்கு நிதி அளிக்​கும் அமைப்​பு​களு​டன் தொடர்பு ஏற்​பட்​டுள்​ளது. அவர்​கள் உதவி​யால் ஜுங்​கூர் பாபா, மகா​ராஷ்டி​ரா​வில் மதம் மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.

பிறகு உ.பி.​யின் பல்​ராம்​பூரில் குடியேறி மதம் மாற்​றும் செயலில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். ஜுங்​கூர் பாபா வழக்கை விசா​ரிக்​கும் ஏடிஎஸ் படை வட்​டாரங்​கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்​போது, “நான்​கா​யிரம் பேரை ஜுங்​கூர் பாபா குறி வைத்​து, 1,500-க்​கும் மேற்​பட்ட பெண்​களை முஸ்​லி​மாக மதம் மாற்றி உள்​ளார்.

அவரது உறவினர்​கள், நெருங்​கிய​வர்​கள் பல இடங்​களில் மக்​களை இஸ்​லாத்​தில் சேர ஊக்​குவிக்​கும் நிகழ்ச்​சிகளை நடத்​தி​ உள்ளனர். கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, ஆஸம்​கரில் சட்​ட​விரோத மதம் மாற்​றம் தொடர்​பாக ஜுங்​கூர் மற்​றும் அவரது உறவினர்​கள் பலர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ஆனால், வழக்​கு​களில் இருந்து தப்​பிக்க காவல் துறை, நிர்​வாகம் மற்​றும் உளவு அதி​காரி​கள் சிலருக்கு அதிக பணம் கொடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர்.

கைது செய்​யப்​பட்ட ஜுங்​கூர் பாபா உள்​ளிட்​டோரை ஏடிஎஸ் சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஹுசைன் அகமது அன்​சாரி முன்பு அதி​காரி​கள் ஆஜர்​படுத்​தினர். இதையடுத்து அவர்​களை 7 நாட்​கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.