156வது தேசிய பொலிஸ் தின
கொண்டாட்டங்கள் முன்னெடுப்பு

0
170

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ஆயூர்வேத வைத்தியசாலை நிலையத்தினால் நேற்று நடமாடும் சேவை இடம் பெற்றது.156வது தேசிய பொலிஸ் தினத்தினை முன்னிட்டு நான்காவது நாளாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை பணிப்பாளர் ஐ.எல்.எம்.றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை சுகாதார சேவைகள் ஒருங்கிணைப்பளார் வைத்தியர் நபீல், ஆயூர்வேத வைத்தியசாலை வைத்தியர் எஸ்.எம்.றிசாத், கல்முனை சுகாதார நகராட்சி கவுன்சில் தலைமை மருத்துவ அதிகாரி எம்.ஜே.கே.எம்.ஏ.காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.நடமாடும் சேவையில் பொது மக்களும், பொலிசாரும் ஆயூர் வேத வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.