19ஆவது திருத்தத்தை மீளவும் கொண்டுவந்து நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் – கரு ஜயசூரிய

0
168

19ஆவது திருத்தத்தை மீளவும் கொண்டுவந்து நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று, முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (18) கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை என்பது ஜனநாயக நாடு. எனினும் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதனூடாக ஜனநாயக நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதனூடாக நாட்டின் ஜனநாயகம் முற்றுமுழுதாக இல்லாமல் செய்யப்பட்டது. தனிநபர் ஒருவருக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டன.

இதன் காரணமாகவே நாட்டுமக்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். அசாதாரண நிமைகளை எதிர்கொண்டுள்ளனர். துன்பத்தை எதிர்கொள்கின்றனர்.

தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்கியதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே நாம் 19ஆவது திருத்தத்தை மீளக்கொண்டுவருமாறு கோருகின்றோம். அவ்வாறு நடந்தால் எதேனும் ஒரு வகையில் மீண்டும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.

இது ஆச்சாரமிக்க நாடு. அரசர்களின் நாடு அல்ல. அரசர்களின் நாடு எனிலும் அவர்களுக்கு ஏற்றவித்தில் நாட்டை கொண்டுநடத்தலாம்.

இது ஜனநாயக நாடு எனும் போது சட்ட ஒழுங்குகள் முறையாக பேணப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு நாடு ஒரு சட்டம் இருக்க வேண்டும். அரசர்களில ஆட்சியில் ஒரு நாடு ஒரு சட்டம் செயற்படுத்தப்படுவதில்லை.

இதன் காரணமாகவே 19ஆவது திருத்தத்தை கொண்டுவருமாறு மீண்டும் கூறுகின்றோம்.

19ஆவது திருத்தத்தினூடாக ஏதேனும் ஒரு வகையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டது.

சுயாதீன குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. அரச நிர்வாகம் நிலைநாட்டப்பட்டது. இதன்காரணமாக நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நற்பெயர் கிடைத்தது. இதன் காரணமாக சர்வதேசத்தின் உதவிகள் எமக்கு கிடைத்தன.

எனினும் 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அனைத்தும் தலைகீழானது.