19 ஆவது திருத்தச் சட்டத்தை அரசு உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்: கரு ஜயசூரிய

0
278

அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதற்கு இணங்க 19 ஆவது திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது உச்ச நீதிமன்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் 19ஆவது திருத்தச் சட்டத்தை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் எந்தவிதமான மக்களின் பங்களிப்பும் இல்லாமல் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதனால் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிய தகவல்களின் பிரகாரம் ஒரு மணித்தியாலத்திற்கு 32 பேர் வெளிநாடு செல்கின்றனர்.
கடந்த 8 மாதங்களில் 500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர் என கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.