ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்டுள்ள வான்கதவுகளின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு குறைந்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கமுவ ஓயாவின் அனைத்து வான்கதவுகளும் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மழை காரணமாக மட்டக்களப்பு, பொலனறுவை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாரியளவு பாதிப்படைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, 2 இலட்சத்துக்கும் அதிக ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.