2 மாவட்டங்கள் மண்சரிவு அபாயத்தில்!

0
86

நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அந்தப் பகுதிகளில் மலைப்பாங்கான மற்றும் சரிவான பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.