நிறைவேற்று அதிகாரங்களைத் தனக்கு மீட்டெடுக்கும் முயற்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் ராஜபக்ஷ குடும்பத்தின் கைகளில் அதிகாரங்கள் போய்விடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தத்தில் ராஜபக்ஷ சகோதரர்கள் தங்களுக்குச் சாதகமான திருத்தங்களைக் கொண்டுவந்து 20ஆவது திருத்தச்சட்டத்தை ஒரு தவமாகவே இருந்து நிறைவேற்றியுள்ளனர்.
இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அசுர பலத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கும் ஒரு வரமாகும்.
ஜனாதிபதி, அதை ஒருபோதும் தமிழ் மக்களின் சாபமாக்கி விடக்கூடாது. அவ்வாறு நேரின் கடைசியில் அது முழு நாட்டுக்குமே பெரும் சாபமாகி விடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.