ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் இன்று பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் சம்மந்தமாக கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஹக்கீம் தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.