அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ள அதேவேயைில், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன அதற்கு ஆதரவளிக்கமாட்டார் எனத் தெரியவந்திருக்கின்றது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன் போது 20ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
.
இதனையடுத்தே சில திருத்தங்களை முன்வைத்து, 20 இற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்தியகுழுக் கூட்டத்தின் பின்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், தேரர்கள் சிலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளையில், முன்னாள் ஜனாதிபதி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எழுத்துமூலமாக அறிவித்திருக்கின்றார்.
“19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவன் என்ற முறையில் மனச்சாட்சிப்படி 20 ஆவது திருத்தத்தை ஆதரித்து என்னால் வாக்களிக்க முடியாது” என அசர் அந்தக் கடிதங்களில் தெரிவித்திருக்கின்றார்.