20 மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு இணைந்த கரங்கள் அமைப்பு உதவி

0
137

இணைந்த கரங்கள் அமைப்பினால், மொனராகலை – பிபிலை ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலையின் அதிபர் மாரிமுத்து சந்திரகுமார் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இணைந்த கரங்கள் அமைப்பினரால் பிபில ஸ்ரீவாணி தமிழ் வித்தியாலய பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் தாய் தந்தையை இழந்த 05 மாணவர்களுக்கு பாதணிகள், புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் பாதணி வழங்கும் நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.