கமல் ஹாசன் தயாரிப்பு – நடிப்பில் கடந்த 3ஆம் திகதி ‘விக்ரம்’ படம் வெளியானது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் மிகப் பெரிய அளவில் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படம் திரைக்கு வந்து 5 நாள்களில் 200 கோடிக்கு இந்திய ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளியான படங்களில் குறைந்தநாளில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டியலில் கமலின் விக்ரம் படமும் இணைந்துள்ளது.