2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப், நவால்னி, கிரேட்டா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை

0
209

இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா துன்பர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இது தவிர உலக பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய ‘ Black Lives Matter’’ ஆகிய பெயர்களும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை ‘நார்வே நோபல் கமிட்டி’ பரிசீலனை செய்து, எதிர்வரும் ஒக்டோபரில் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும்.