2023 இல் 470 காட்டு யானைகள் உயிரிழப்பு !

0
80
காட்டு யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மஞ்சுள அமரரத்தே தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தில் மாத்திரம் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 200 யானைகள் மனித நடவடிக்கைகளினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், 83 காட்டு யானைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், வெடிமருந்துகள் மூலம் 47 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இதேவேளை கடந்த செப்டெம்பர் 27 ஆம் திகதி மாத்திரம்11 காட்டு யானைகள் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.