2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

0
179

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது கட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் இந்தியாவிலுள்ள 10 மைதானங்களில் இடம்பெறவுள்ளன.
இன்று இடம்பெறும் போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.