2023 – 2024 காலப்பகுதிக்கான நிலக்கரி பெறுகைக்கு அமைச்சரவை அனுமதி

0
159

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்குத் 2023/2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி பெறுகைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2023/2024 காலப்பகுதிக்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2.25 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பெறுகை செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.