2023ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் டாப் 10 திரைப்படங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த முக்கிய தமிழ் படங்கள்

0
136

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கு மாபெரும் வரமாக அமைந்தது.

பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களும், சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், வசூல் ரீதியாக இந்தியளவில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் இந்திய திரைப்படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இந்த டாப் 10 லிஸ்டில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 2வது இடத்தில் அனிமல் மற்றும் 3வது இடத்தில் மீண்டும் ஷாருக்கானின் பதான் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

தமிழில் இருந்து ரஜினியின் ஜெயிலர் 6வது இடத்தையும், விஜய்யின் லியோ 7வது இடத்தை பிடித்துள்ளன நிலையில், மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 10வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  1. ஜவான்
  2. அனிமல்
  3. பதான்
  4. கதர் 2
  5. சலார்
  6. ஜெயிலர்
  7. லியோ
  8. டைகர் 2
  9. டங்கி
  10. பொன்னியின் செல்வன் 2