2024 லங்கா பிறிமியர் லீக் ரி-20 கிரிக்கெட் தொடர்: விளம்பரத் தூதராக மைக்கல் கிளார்க்

0
95

2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் விளம்பரத் தூதராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த தொடரானது ஜூலை 21ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் சிறப்பான தொடராக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.