‘இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (14) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
டிஜிற்றல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனையில்….
2018 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு மூலோபாயம் 2019 ஆண்டு தொடக்கம் 2023 ஆண்டு வரை அமுல்படுத்தப்பட்டது.
இலங்கை கணணி அவசர பதிலளிப்புக் குழுவினால் முதலாவது இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயத்தின் அடிப்படை மற்றும் உலக வங்கியின் உதவியுடன் இணையவழி பாதுகாப்பு தொடர்பான ‘இலங்கையின் தேசிய இணையவழிப் பாதுகாப்பு மூலோபாயம் 2025 – 2029’ தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான சிவில் துறைகள் மட்டுமே உள்ளடக்கப்படும் வகையில் சட்ட ரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டகத்தை மேம்படுத்துதல், அறிவை அதிகரித்தல், இணையவழிப் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துதல்,பதில்வினையாற்றல் திறனை அதிகரித்தல் மற்றும் ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் ஆகிய தொனிப்பொருட்களை அடிப்படையாக கொண்டு மேற்குறித்த மூலோபாய வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.