21ஆவது திருத்தத்தை பிற்போடுவதற்கான உபாயமார்க்கங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் தற்போதயை நிலையில், பொருளாதார பிரச்சினை, அரசியல் பிரச்சினை, சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றன.
உரப்பிரச்சனை காரணமாக விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம், அதன் பிறகு முன்னெடுக்கப்பட்டு கொழும்பு காலிமுகத்திடல் போராட்டம், ஏனைய போராட்டங்கள் காரணமாக சமூக பிரச்சினை ஏற்பட்டு அதன் பின்பு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது. இவை இரண்டும் சேர்ந்து அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளன.
இவற்றுக்கு ஜனநாயக ரீதியிலான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நாட்டு மக்களினதும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள தரப்பினரதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
ஜனநாயக ரீதியிலான தீர்வில் பிரதான விடயமாக 21ஆவது திருத்தம் அமைந்துள்ளது.
இந்த 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதை பிற்போடும் செயற்பாடுகளை ஒரு உபாயமார்க்கமாக தற்போது முன்னெடுத்து செல்கின்றனர்.
இவற்றுக்கு நாம் எமது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
நாட்டில் ஜனநாயக ரீதியலான சமூகம் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களினதும் எமதும் எதிர்பார்ப்பாகும்.
நாட்டில் எதிர்காலம் தொர்பில் சிந்தித்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.
225 உறுப்பினர்களும் வேண்டாம் என்பதே மக்களின் நிலைப்பாடாக உள்ளது. இந்த இடத்தில் அரசாங்க கட்சி, எதிர்க் கட்சி என்ற வேறுபாடு இல்லை. 225 உறுப்பினர்களும் வேண்டாம் என்பதே ஒட்டுமொத்த மக்களினதும் நிலைப்பாடு.
எனவே சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற குழுக்கள் அல்லது அமைச்சுக்களின் குழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் வகையிலான வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
அரசியலில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைiயை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்