28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

2,100 க்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கிகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள்: காஞ்சன விஜேசேகர

நாடளாவிய ரீதியில், 2 ஆயிரத்து நூறுக்கும் அதிகமான நிறுவனங்களிடம், அங்கிகாரமற்ற வகையில், எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றின் மூலம், இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு, அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் வழங்காது.
தற்போது, ஆயிரத்து 250 ற்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு, எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வணிக நிறுவனங்கள், தமது எரிபொருள் தேவைக்கான கட்டணத்தை, அமெரிக்க டொலரில் செலுத்த வேண்டும்.
அத்துடன், குறித்த வணிக நிறுவனங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகஸ்தரர்களிடம் இருந்து, எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும்.
குறித்த நடைமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு, எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.
எதிர்வரும் இரண்டு நாட்களில், மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளது.
40 ஆயிரம் மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே, இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளது.
92 ரக ஒக்ரேன் பெற்றோல் கப்பல் ஒன்றும், எதிர்வரும் 27 அல்லது 29 ஆம் திகதிகளில், இலங்கைக்கு வரவுள்ளது.
குறித்த கப்பலில், 33 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் இருப்பு உள்ளது.
இதேவேளை, நாட்டை வந்தடைந்த, 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல், கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள், இன்று இடம்பெறுகின்றன.
என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles