எதிர்காலத்தில் 22 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2018, 2019, 2020 பட்டமளிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அரச சேவைக்கு ஆள்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 35 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கும் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.