22ஆம் திருத்தத்துக்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு!

0
114

இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று 22வது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஷரத்துக்கு எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஷரத்துடன் 22 வது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் சம்பந்தமான ஷரத்து 22ஆவது திருத்தச் சட்டத்தில் ஒருவரை இலக்கு வைத்து உள்ளடக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய வாக்களிக்க அனுமதிக்கும் யோசனை தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை வருடங்களில் கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை நான்கரை ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என யோசனை முன்வைக்கவும் பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.