தமிழ் தேசம் எனப் பேசுகின்ற போது தாயகத்தில் இருக்கிற சனத்தொகையுடன், புலம்பெயர் தமிழ் மக்களும் அதன் ஒரு அங்கம். அவர்களை பாதிக்கும் இரட்டை பிரஜாவுரிமை தீர்மானத்தை நாம் ஏன் ஏற்க வேண்டும். ஆகவே 22 வது திருத்தச் சட்டம் என்பது ஆட்சியில் உள்ள கள்ளக் கூட்டம் தம்மை ஜனநாயகவாதிகள் எனக் காட்ட எடுத்த ஒரு நாடகம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.