சுமார் 33.5 கிலோவுக்கும் அதிக எடைக்கொண்ட கொக்கேய்ன், ஹேஷ் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களுடன் பேலியகொடை பகுதியில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 23 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதானவர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, ஒரு கிலோகிராம் கொக்கேன், 24 கிலோ 500 கிராம் ஹேஷ் மற்றும் 8 கிலோகிராம் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.