இப்படியும் நடக்கிறது

0
91

அவர் ஒரு தெற்கின் முன் னணி தமிழ் அரசியல்வாதி. அடிக்கடி அவருடன் இலங்கை அரசியல் பற்றி பேசுவது உண்டு.

நேற்று அவரிடம் பேசிய போது, ‘உங்களுக்கும் கிடைத் ததா?’ என்று அவரிடம் கேட் டேன். அவர் ‘என்ன கிடைத்ததா என்று கேட்கிறீர்கள்?’ என்றார். ‘

எல்லா எம். பிக்களுக்கும் கிடைத்ததாக சொல்கிறார் களே, அதுதான்’ என்றேன். அப்போதும், அவருக்கு புரியவில்லை என்பது தெரிந் தது. அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கியதைத்தானே கேட்கி றீர்கள்?’

என்று அவர் பதில் கேள்வி கேட்டார். அது அவரவர்கள் தத்தமது மாவட்டங்களில் செய்யவிரும் பும் அபிவிருத்தி பணிகளுக் கான நிதி ஒதுக்கீடு அல்லவா? நான் கேட்பது உங்கள் தனிப் பட்ட அபிவிருத்திக்கானது என்று சொன்னேன். அப்போதும் அவருக்கு புரியவில்லை. இனியும் அது பற்றி இப்படி பூடகமாக பேசு வது பயனில்லை என்பதால் நேரடியாகவே கேட்டேன்,

‘இல்லை சிலருக்கு மதுபான லைசன்ஸ் கொடுத்தார்களாமே உங்களுக்குக் கிடைக்கவில் லையா’ என்று. அவர் சொன்னார், ‘என் னிடமும் கேட்டார்கள்தான். ஆனால், பாராளுமன்றத்தில் உள்ள இருநூற்றி இருபத்தி ஐந்து எம். பிக்களுக்கும் கொடுப்பதானால் எடுக்கி றேன் என்று சொன்னேன்’, என்றார். இனி என்ன வடக்கு – கிழக்கில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்களோ அல்லது மதுபானசாலைகளோ திறக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் யார் அல்லது அந்த உரிமங்களை யாரிடமிருந்து வாங்கினார்கள் என்பதை அறிய மக்கள் முண்டியடிக்கப் போகின்றார்கள்.

ஜனாதிபதி ரணிலுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த நமது சில பாராளுமன்ற உறுப் பினர்களும் இப்போது அவருக்கு நெருக்கமாகியிருப்பதையும் சிலர் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். சரி இனி இன்று சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம். ஓர் அரசியல் கட்சி எப்படி யெல்லாம் இயங்கக்கூடாதோ அப்படியெல்லாம் இயங்கு வதற்கு உதாரணம் என்றால் அது நமது தமிழ் அரசு கட்சி தான்.

அது இன்று நீதிமன்றத் தின் படிகளை ஏறி இறங்கு வதற்கு காரணமே அது கடந்த பல ஆண்டுகளாக சிலர் தாம் நினைத்தவாறு செயல்பட்டது தான் என்பது இரகசியமானது அல்ல. கட்சி தொடங்கப்பட் டபோது நாட்டில் தொகுதி வாரியாக பாராளுமன்ற பிரதி நிதித்துவம் இருந்தபோது ஒவ்வொரு தொகுதிக்கும் என்று கிளைகள் இருந்தன.

அந்த அந்த தொகுதி எம். பிக்கள் அந்த தொகுதிக் கிளையின் தலைவர்களாக இருந்தனர். அல்லது தொகு திக்கு தமிழ் அரசு எம். பி. இருக்கவில்லை என்றால் தொகுதியின் மூத்த தலைவர் ஒருவர் தலைவராக இருந்தார். மாவட்ட தேர்தல் முறை அமுல்படுத்தப்பட்டதும், தொகுதிக்கு பதிலாக பிரதேச சபைக் கிளைகளை தொகுதிக் கிளையாக கொள்வது என்று யாரோ சிலர் முடிவெடுத்து தமது இஷ்டப்படி பிரதேச கிளைகளிலிருந்து உறுப்பினர் களை பொதுச் சபைக்கு தெரிவுசெய்தனர்.

அதுவே இன்று நீதிமன்ற படிகளை ஏறிஇறங்க முக்கிய காரணமானது. அதாவது கட்சியாக- ஒரு முடிவு எடுக்கப்படாமல், யாரோ சிலரோ அல்லது ஒருவரோ தாமாக முடிவெடுத்து பொதுச் சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்தனர். இதனை ஏற்றுக்கொண்டு தான் தலைவர் தெரிவுக்காக பொதுச்சபை கூடியிருந்ததும் அதில் சிறீதரன் வெற்றிபெற சுமந்திரன் தோற்றுப் போன தும் பழைய சங்கதிகள். ஆனால், அந்த பொதுச்சபையில் எத் தனை பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

அது கட்சி யாப் புக்கு முரணானது என்பதை தெரிந்துகொண்டுதான் போட் டியிட்டவர்களும் சரி, இப்போது அதனை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோனவர்களும் சரி கலந்துகொண்டிருந்தனர்.

இத்தனை நெருக்கடிகளுக்கும் காரணம், கட்சியில் ஒரு முக்கிய முடிவை கட்சியாக எடுக்கமால் தன்னிச்சையாக அதன் தலைவரோ அல்லது அவருக்கு நெருக்கமானவர் களோ செய்ததுதான் என்பதைத் தெரிந்துகொண்டும் –

இப்போதும் கட்சி அதே பாணியிலேயே இயங்கிக் கொண்டிருப்பதும் தான் ஜீரணிக்க முடியாததாக இருக்கின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்கவேண்டும் என்ப தில் தமிழ் அரசு இரண்டுபட்டு நிற்கின்றது. அதில், சுமந்திரன் அணி எதிராகவும் சிறீதரன் அணி ஆதரவாகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன.

ஆனால், கட்சி இன்னமும் அது பற்றிய இறுதி முடிவை – கட்சியாக எடுக்கவில்லை. ஆனால், சுமந்திரனோ துணிச்சலுடன், கட்சி தமிழ் வேட்பா ளரை நிறுத்தாது – கட்சியின் முடிவு அது என்கிறார். அவர் சொல்வதும் சரியானதுதான். பொது வேட்பாளரை நிறத்தும் முயற்சியில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப் புத்தான் முடிவெடுக்கவிருக்கின்றது.

அதில் இணைந்து கொள்வதா அல்லது அதற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதா என்பதைத்தான் தமிழ் அரசு இனி முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், சுமந்திரனோ கட்சி முடிவெடுக்க முன்னரே – கட்சி முடிவெடுத்து விட்டதாக தனிச்சையாக அறிவிக்கிறார்.

அதனை கட்சியிலுள்ள பொறுப்புள்ள எவரும் கண்டுகொண்டதாக இதுவரை தெரியவில்லை. இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? கட்சியி லுள்ள மற்றவர்களின் ‘தன்னம் பிக்கையை’ கேள்விக்கு உள் ளாக்குகின்றன. யாழ்ப்பாண தமிழில் சொல்வதானால் முதுகெலும்பை பரிசோ தனைக்கு உட்படுத்தச் சொல் கின்றனவோ?

– ஊர்க்குருவி.