கொழும்பு 13 யை சேர்ந்த 79 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்று தனது வீட்டில் உயிரிழந்தார்.அதன் பின்னர் நடந்த மரண பரிசோதனையின் போது
அவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு அதிகமான காலம் இவர் தனது வீட்டிலேயே நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார்.
கொவிட் தொற்று ஏற்பட்டதன் பின்னர் மாரடைப்பு காரணமாக இவர் இறந்திருப்பதாகவும் மரண பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மரணமானது இலங்கையின் 24 வது கொவிட் மரணமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.