25 வருடங்கள் சவுதியில் பணியாற்றும் இலங்கையர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

0
54

இலங்கை – சவுதி அரேபியா இவ்வருடம் (2024) தமக்கு மத்தியிலான ராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியாவதைத் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் 25 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சவுதி அரேபியாவில் பணியாற்றி விட்டு தாய்நாட்டுக்கு செல்லும் இலங்கையர்களை கௌரவிக்கும் வகையில் ஒரு முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன்படி மேற்கூறிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த சவுதி அரேபிய வாழ் இலங்கைத் தொழிலாளர்கள் ஒரு சிறிய சுயவிபரக் கோவையுடன் (CV) அவர்களின் தமது விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மேலதிக விபரங்களுக்கு:  Slemb.riyadh@mfa.gov,lk , +966535782678