25 இலட்சம் ரூபாவை கப்பம் கோரிய காவல்துறை பரிசோதகருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 15 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்கக் குறித்த காவல்துறை பரிசோதகர் கையூட்டல் கோரியமை தெரியவந்துள்ளது.
குறித்த காவல்துறை பரிசோதகர், புதிய செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்தே கப்பம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.