3ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் இழந்து இந்தியா தடுமாற்றம்

0
18

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 445 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இதேவேளை, முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 445 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

நேற்று ஆட்டநேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 405 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

சிறப்பாக விளையாடி வந்த அலெக் ஹெரி 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 117. 1 ஓவர்களில் 445 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அந்த அணி இன்றைறைய நாள் ஆட்டநேர முடிவில் 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் இழந்துள்ளது.

இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்து சில மணி நேரத்தில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக தடைப்பட்டது. பின்பும் மழை பெய்யத் தொடங்கியதால் இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.