3 மாவட்டங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு

0
90
This image depicts an adult female Aedes aegypti mosquito feeding on a human subject with darker skin tone.
புத்தளம், நாத்தாண்டி, குருணாகல், பதுளை மற்றும் ஹாலி-எல ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதனைத் தவிர கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே குறிப்பிட்டார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 80222 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.