30,000ஐ தாண்டியது கைதிகளின் எண்ணிக்கை

0
91

நாளாந்தம், சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம், சுமார் 400 பேர் சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிர்வகித்து, கைதிகளை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை, 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.