30,000 மெட்ரிக் தொன் அரிசி முன்பதிவு!

0
26

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவிலிருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம், தனியாருக்காகவும் இந்த அரிசி இருப்புக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் குறைவாக இருப்பதால், குறைந்த அளவு அரிசியை இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாடு, பச்சை, சம்பா ஆகிய அரிசி வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.