340 கிலோ ஹெரோயினுடன் கேரளாவில் இலங்கையர்கள் ஐவர் கைது!

0
185

இந்தியா – கேரளா கடற்குதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் 340 கிலோ ஹெரோயினுடன் இலங்கை படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த படகில் பயணித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘கிங் 2021’ என முத்திரையிடப்பட்டுள்ள குறித்த ஹெரோயின் தொகை இந்திய மதிப்பில் 340 கோடி பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மார்ச் 30ம் திகதி 300 கிலோ ஹெரோயின், ஐந்து ஏகே-47 துப்பாக்கிகள், 1000 தோட்டாக்களுடன் இலங்கை படகு சிக்கியதுடன், அதில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.