35 மில்லியன் ரூபாவை எட்டியது அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம்!

0
99

அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் கடந்த தினத்தில் 35 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (15) நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளை விட்டு வெளியேறிய வாகனங்களின் எண்ணிக்கை 126,760 என அதன் இயக்குநர் ஜெனரல் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.

இதன்படி, அக்காலப்பகுதியில் கிடைத்த வருமானம் 34,974,100 ரூபாவாகும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.