3,500 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில்!

0
11

பொசன் தினத்தையொட்டி, நாளை திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அத்துடன், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவற்றை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் திருடர்களிடமிருந்து தங்கள் மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாத்து கொள்ளுமாறும் பக்தர்களை பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.