35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு

0
228

இன்று வரையில் சுமார் 35,000 இற்கு அதிகமானவர்கள் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று (27) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று வரையில் சுமார் 185,000 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.