41 நாடுகளுக்கு அமெரிக்கா செல்ல தடை – ட்ரம்ப்பின் அதிரடி தீர்மானம்!

0
4

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக கடுமையாக செயற்பட்டு வருகிறது .இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ,பெலாரஸ் ,இபூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,இந்த நாடுகளை மூன்று குழுக்களாக பிரித்து முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய தடையை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.