இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில், அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மிக முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.