5 இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை

0
209

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 06ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது 9 இலட்சத்து 24 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், 3 இலட்சத்து 56 ஆயிரத்து 730 தடுப்பூசிகள் மாத்திரமே களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.