5 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கியில் 70 மணித்தியாலங்களுக்கே ஒக்சிஜன்

0
205

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் பயணித் நீர்மூழ்கி காணாமல் போன நிலையில் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனேடிய கரையோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளனர். 

இந்நீர்மூழ்கியில் உள்ள ஒக்சிஜன் சுமார்  70 மணித்தியாலங்களுக்கே போதுமானதாக இருக்கும் என  போதுமானதாக இருக்கும் கருதப்படுவதாக என அமெரிக்க அதிகாரிகள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

6.5 மீற்றர் (21 அடி) நீளமான, டைட்டன் எனப் பெயரிடப்பட்ட இச்சிறிய நீர்மூழ்கியில் 5 பேர் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைவரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமீஷ் ஹார்டிங்கும் இந்நீர்மூழ்கியில் பயணித்தார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் எனும் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்நீர்மூழ்கி கனடாவின் சென் ஜோன்ஸ் நகரிலிருந்து கடந்த 16 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது, 

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சமுத்திரத்தின் அடிப்பகுதியை நோக்கி இந்நீர்மூழ்கி இறங்கத் தொடங்கியது.  எனினும் 2 மணித்தியாலங்களின் பின்னர் இந்நீர்மூழ்கியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மசாசூசெட்ஸ் மாநில கரையோரத்திலிருந்து சுமார் 900 மைல்கள் (1450 கிலோமீற்றர் தூரத்தில்) தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க கரையோர காவல்படை தெரிவித்துள்ளது,  அதேவேளை. கனேடிய கரையோர காவல்படையும் விமானமொன்று சகிதம் மீட்புக்குழுவை அனுப்பியுள்ளது.

அமெரிக்க, கனேடிய கடற்படையினர் மற்றும் வணிக ஆழ்கடல் பயண நிறுவனங்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

டைட்டான் எனப் பெயரிடப்பட்ட இந்த  நீர்மூழ்கி 4,000 மீற்றர் ஆழம்வரை செல்லக்ககூடியது என  ஓஷன்கேட் எக்ஸ்பெடிசன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளை பார்வையிடுவதற்கான 8 நாள் பயணத்துக்கு 250,000 டொலர்கள் அறவிடப்படடுகிறது. டைட்டடானிக் கப்பல் சிதைவுகளை நோக்கி சுழியோடுவத்றகான வாய்ப்பும் இதன்போது வழங்கப்படுகிறது.

இந்நீர்மூழ்கியில் ‍6பொதுவாக  மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதில் சுமார் 70 மணித்தியாலங்களுக்குப் போதுமானது ஒக்சிஜனே எஞ்சி இருக்கும் தாம் கருதுவதாக அமெரிக்க கரையோர காவல்படை அதிகாரி றியர் அட்மிரல் ஜோன் மோகர் கூறியுள்ளார்.