தயாரிப்பாளரும் இயக்குநருமான பிருத்விராஜ் ‘சலார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிக்கும் “சலார்” படத்துக்காக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் தனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார் பிருத்விராஜ்.
இந்த படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் டிசம்பர் 22ஆம் திகதி கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 01ஆம் திகதி வெளியானது.
5 மொழிகளில் வெளியான இந்த டிரைலர் மொத்தம் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் ‘சலார்’ படத்தின் புரமோஷன் நிகழ்வுகள் ஒவ்வொரு மொழியிலும் நடக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.