நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5.07 வீதத்தால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, பேருந்துக் கட்டணம் 2 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக 28 ரூபா அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.