நாட்டில் கடந்த 5 நாட்களில் மொத்தம் 399 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பதிவான வீதி விபத்துக்களில் சிக்குண்டு 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 669 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விபத்துக்களில் மொத்தமாக 2,242 வாகனங்கள் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. அவற்றுள் 1,429 மோட்டார் சைக்கிள்களும், 552 முச்சக்கர வண்டிகளும் அடங்கும்.