களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரி விற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வேதவத்த /மகாலந்தாவ தெற்கு / மகுருமஸ்வில / குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு ஆகிய 5 கிராமங் களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்தில் சுமார் 50 வீடுகளுக்குப் போக் குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கை களைக் கருத்தில் கொண்டு குறித்த கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.