இஸ்ரேல் இராணுவம் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.இதன்படி கடந்த வாரத்தில் மாத்திரம் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் 50 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தமது நிர்வாகத்தின் போது மத்திய கிழக்கில் அமைதியைப் பேணியதாகவும் விரைவில் மீண்டும் அமைதி ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.